இளம் மனைவியை அடித்தே கொலை செய்த பிரபல செய்தி வாசிப்பாளர்! கள்ளக் காதலை கண்டுபிடித்ததால் அரங்கேறிய கொடூரம்!

நண்பனின் உதவியுடன் கணவர் மனைவியை கொலை செய்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் அஜிதேஷ் மிஷ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மாநிலத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொடர்பாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

அஜிதேஷ் பணியாற்றும் ஊடகத்திலேயே பாவ்னா ஆர்யா என்ற இளம் பெண் பணியாற்றிவருகிறார் இருவருக்கும் தொடக்கத்தில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.   இந்த நிகழ்வானது திவ்யாவுக்கு தெரியவந்துள்ளது. அடிக்கடி திவ்யா தன்னுடைய கணவரிடம் கள்ளக்காதல் குறித்து சண்டையிட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் அஜிதேஷ் தன் மனைவியை கொன்றுவிட்டு பாவ்னாவுடன், வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அஜிதேஷ் தன்னுடைய நண்பரான ஆப்பில் என்பவருடைய உதவியுடன் மனைவியை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். அதன்படி 14-ஆம் தேதியன்று அஜிதேஷ், அகில்லை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். திவ்யாவிற்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் சகஜமாக பேசி கொண்டிருந்தார். திவ்யா தங்களுடைய திருமண புகைப்பட ஆல்பத்தை அகிலிடம் காட்டுக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த பூச்சட்டியை எடுத்து அகில் திவ்யாவின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார். 

திவ்யா இறந்த செய்தியானது அப்பகுதி காவல்துறையினருக்கு தெரியவந்தது. சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அஜிதேஷிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர் கள்ளக்காதலுக்காக தன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். காவல்துறையினர் அஜிதேஷ், பாவ்னா மற்றும் அகில் குமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.