25 வயது இளம் மனைவி! தோலை உரித்து அணுஅணுவாய் கொலை செய்த கணவன்! பகீர் காரணம்!

மெக்சிகோ நாட்டில் போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து உடம்பில் இருந்து தோலை உரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ வயது 46 என்ற நபர் மெக்சிகோவில் வசித்து வருகிறார் இவருக்கு 25 வயதில் இளம் பெண் ஒருவர் மனைவியாக உள்ளார். இவர்களுக்கு இடையே அமைந்துள்ள அதிகப்படியான வயது வித்தியாசம் இவர்களுக்குள் அடிக்கடி பல சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி உள்ளது.

அதன் உச்சகட்டமாக இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது எரிக் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை மிகவும் பெரியதாக மாறியுள்ளது. ஆத்திரம் தாங்காத ஏறிக் சமையலறையில் இருந்த கத்தியை கொண்டு வந்து தன் மனைவியின் கழுத்தில் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் தன் மனைவியின் உடலை யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாற்ற வேண்டும் என்பதற்காக தலைமுதல் கால் வரை அவரது உடம்பில் இருந்து தோலை உரித்து உடல் பாகங்களை துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர் அதனை அருகில் இருந்த கால்வாயில் வீசி இருக்கிறார். 

இதனையடுத்து கொலை செய்து அதற்கான ஆதாரங்களையும் தன் வீட்டில் இருந்து முழுவதுமாக அகற்றி இருக்கிறார். பின்னர் தன்னுடைய முதல் மனைவிக்கு போன் செய்து தன்னுடைய இரண்டாவது மனைவியை கொலை செய்ததை பற்றி கூறியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த அவருடைய இரண்டாவது மனைவி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து இருக்கிறார்.

தகவலறிந்து வந்த போலீசார் அந்த இளம்பெண்ணை கொலை செய்த அவரது கணவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரது வீட்டில் இருந்த உடல் பாகங்களையும் கைப்பற்றியுள்ளனர். தோல் உரிக்கப்பட்ட அந்த பெண்ணின் உடல் பாகங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டது இந்த புகைப்படத்தை மெக்சிகோ நாட்டில் இருக்கும் ஒருசில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த புகைப்படங்கள் பார்ப்போரின் நெஞ்சங்களை பதைபதைக்கிறது என்றுதான் கூற வேண்டும்.