யார் கூட கொஞ்சிகிட்டு இருக்கடி? மனைவி உடலில் 30 இடங்களில் கத்தி குத்து..! நள்ளிரவில் கணவன் போட்ட வெறியாட்டம்! பதற வைக்கும் காரணம்!

மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கணவர் கொடூரமான முறையில் அவரை கொலை செய்திருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் செரீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 27. இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஜுபைதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஜுபைதாவின் வயது 25. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த செரீஃபுக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது கணவன் மனைவி இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தினர் இருவரையும் விலக்கி வைத்து சமாதானப்படுத்துவர்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஆடியோ பதிவை பற்றி ஷெரிப், ஜுபைதாவிடம் முறையிட்டுள்ளார். ஜுபைதா செல்போனில் இருந்த அந்த ஆடியோவில் அவர் யாருடனோ சிரித்து பேசுவது போல் இருந்துள்ளது. இது இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்களை உருவாக்கியது. இருவரும் கடுமையாக சண்டை போட்டுக்கொண்டனர். ஒருவழியாக அக்கம்பக்கத்தினர் இருவருக்கும் இடையே தகராறு தீர்த்து வைத்தனர்.

ஆனால் செரீஃபுக்கு ஆத்திரம் தீரவில்லை. நள்ளிரவில் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து ஜுபைதாவின் உடலில் சரமாரியாக குத்தியுள்ளார். சுமார் 30 இடங்களில் ஜுபைதாவின் உடலில் கத்திக்குத்துக்கள் விழுந்துள்ளன. மனைவி இறந்ததை உறுதி செய்துகொண்ட செரிப் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஜுபைதாவின் உடலை மீட்டெடுத்தனர். பின்னர் அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஜுபைதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக இருந்த செரிஃப்பை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.