நான் இல்லாதப்ப வீட்டுக்கு எவன் வர்றான்? 9 மாத குழந்தையுடன் காதல் மனைவியை உயிரோடு எரித்த கணவன்! பதற வைக்கும் காரணம்!

மனைவியின் நடத்தை மீது சந்தேகித்த கணவன், மனைவி மற்றும் கைக்குழந்தையை எரித்துக்கொன்ற கொடூரமானது ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் பிரகாசம் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட லிங்குண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி. இவர் 2 வருடங்களாக ஸ்ரீலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சென்ற ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இத்தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கோட்டிக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி பலமுறை கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதம் 3-ஆம் தேதியன்று வழக்கம்போல கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளன.

ஆத்திரமடைந்த கோட்டி தன்னுடைய மனைவி மற்றும் கைக்குழந்தையை கொலை செய்துள்ளார். பின்னர் அதே கிராமத்தின் சாலையோரத்தில் இருவரது உடல்களையும் பெட்ரோல் ஊற்றி எரித்து சென்றுவிட்டார்.

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியது கோட்டிதான் இந்தக் கொலைக்கு காரணமாக என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக காவல்துறையினர் கோட்டியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.