உயிரிழந்த கர்ப்பிணி மனைவி..! இதயத்தை எடுத்து தானமாக கொடுத்த கணவன்! சோகத்திலும் நெகிழ வைத்த செயல்!

உயிரிழந்த கர்ப்பிணி மனைவியின் இதயத்தை கணவர் தானமாக அளித்துள்ள சம்பவமானது வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கௌதம்ராஜ். இவருடைய மனைவியின் பெயர் கோகிலா. கோகிலா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது திடீரென்று அவருடைய உடல்நிலை மோசமாக தொடங்கியது. 

உடனடியாக அவர் வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 7-ஆம் தேதியன்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவருடைய குழந்தையை வெளியே எடுத்தனர். அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இருப்பினும் கோகிலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமானது.

நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கோகிலா இறந்துவிட்டார். அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு அவருடைய கணவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அதன்படி கோகிலாவின் இதயமும் கல்லீரலும் நேற்று சென்னை அடையாரிலுள்ள மலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த செய்தியானது படிப்போர் உள்ளத்தை உருக செய்துள்ளது.