இந்தியில் யார் கூட பேசுற? கண்டுபிடித்த மனைவி! பட்டப்பகலில் கணவன் எடுத்த விபரீத முடிவு! சேலத்த

தன் நடத்தையில் மனைவி சந்தேகித்ததால், பட்டப்பகலிலேயே கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே மகேஷ்குமார் என்ற 32 வயது ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவருக்கு ஜூலை மாதம் 11-ஆம் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன ஒரே வாரத்திலேயே இவருடைய தந்தை இறந்து போனார். இதனால் ராணுவத்தில் தன்னுடைய விடுப்பு காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு அதிகரித்து கொண்டார்.

திருமணம் நடந்த நாள் முதல் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வழக்கம் போல சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்குமார் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தை திடீரென்று நிறுத்தியுள்ளார். பின்னர் மேம்பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தன் கண்முன்னே நிகழ்ந்த இந்த சம்பவத்தை கண்டு புவனேஸ்வரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேம்பாலத்துக்கு கீழே வந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் மகேஷ்குமார் சடலமாக கிடந்தார். இதனை கண்ட புவனேஸ்வரி அழுதுகொண்டே இருந்தார். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மகேஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தற்கொலைக்கான விசாரணையில் புவனேஸ்வரியிடமிருந்து காவல்துறையினர் தொடங்கியதில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின. 

அதாவது, மகேஷ்குமார் மொபைலில் தன்னுடைய சக ராணுவ வீரர்களிடம் இந்தியில் பேசி கொண்டு வந்துள்ளார். இந்தி புரியாததால் தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்று புவனேஸ்வரி எண்ணி உள்ளார். இதனால் புவனேஸ்வரி தன் கணவரிடம் மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்துள்ளார். சம்பவத்தன்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது புவனேஸ்வரியின் கேள்விகள் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு இருந்துள்ளது. இதனால் மகேஷ்குமார் உனக்கு பதில் சொல்வதை விட சாவதே மேல் என்று கூறிவிட்டு மேம்பாலத்தின் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இருப்பினும் மகேஷ்குமாரின் மரணத்தில் மேலும் சில மர்மங்கள் இருப்பதாக காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.