தாலி கட்டும் போதே நான் கர்ப்பம்! அது அவருக்கும் தெரியும்! 11 மாத குழந்தையை கொன்று தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

11 மாத குழந்தையை தாய் உட்பட ஐந்து பேர் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் திருமால் புதுப்பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. பகுதியில் அமல்ராஜ் மற்றும் சுஷ்மிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் இவர்கள் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவரும் நெருக்கமாக பழகிய காரணத்தால் சுஷ்மிதா கர்ப்பமாகி இருக்கிறார். 

ஆகையால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு பெரியோர்கள் அமல்ராஜ் உடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். செய்துகொண்டபோது சுஷ்மிதா மைனராக இருந்திருக்கிறார்.திருமணம் முடிந்து இரண்டு மாதங்களில் சுஷ்மிதாவிற்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 

சுஷ்மிதா அமல்ராஜ் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக அவரது மாமன் மகனுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது ஆகையால் அமல்ராஜ் எப்பொழுதும் ஸ்மிதாவை தவறான கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறார். மேலும் அந்தக் குழந்தை தன்னுடையது இல்லை எனவும் கூறி வந்திருக்கிறார்.

 இதனால் அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தையை பராமரிப்பதும் தூக்குவதும் கிடையாது. ஆகையால் சுஷ்மிதாவும் அவரது கணவர் அமல்ராஜும் இணைந்து புதிதாக திட்டமிட்டிருக்கின்றனர். இந்த குழந்தை இருப்பதாலேயே தான் நாம் இருவருக்கும் பிரச்சினை வருகிறது.

 

 ஆகையால் நாம் இருவரும் இணைந்து இந்த குழந்தையை கொன்று விடுவோம் என்று அமல்ராஜ் தன்னுடைய மனைவிக்கு யோசனை கூறியிருக்கிறார் . உடனே சுஷ்மிதா கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என்பதை கருத்தில் கொண்டு இந்த பாவப்பட்ட செயலுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். பின்னர் சுஷ்மிதாவும் அவரது கணவரும் இணைந்து தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை துடிதுடிக்க வைத்து கொலை செய்தனர். 

 

பின்னர் இந்த சம்பவத்தை பற்றி அறிந்த சுஷ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கம், தன்னுடைய மகள் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த கொலையை தன்னுடைய மருமகன் அமல்ராஜ் தான் செய்தார் என போலீசில் புகார் அளித்தார். 

ஆனால் போலீஸ் விசாரணையில் சுஷ்மிதா முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியிருக்கிறார் .

பின்னர் போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகம் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொழுது கணவன் மனைவி இருவரும் இணைந்து தான் இந்த கொலையை செய்து இருக்கிறார்கள் என்றும் இதற்கு அமல்ராஜின் பெற்றோரும் உடைந்த எனவும் தெரியவந்துள்ளது . மேலும் தன் மகளை காப்பாற்ற நினைத்த சூசை மாணிக்கத்தையும் போலீசார் கைது செய்துள்ளனர்.