சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு 37 வயது கணவன் பைக்கில் இருந்து இறங்கிச் சென்ற 27 வயது மனைவி..! அங்கு அரங்கேறிய பகீர் சம்பவம்!

கர்நாடகாவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள சென்ற மனைவியைக் காப்பாற்றுவதற்காக சென்ற கணவனும் சேர்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் தாலுகாவில் அண்ணனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கெம்பண்ணா(வயது 37) பூர்ணிமா(வயது 27) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவருக்கும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபத்தில் பூர்ணிமா கணவருடன் கோபித்துக்கொண்டு தன்னுடைய குழந்தையையும் அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனையடுத்து பூர்ணிமாவின் கணவர் கெம்பண்ணா நேற்றைய தினம் பூர்ணிமாவின் அம்மா வீட்டிற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி மனைவியையும் குழந்தையும் தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு பூர்ணிமாவும் சம்மதித்து தன்னுடைய கணவருடன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டிருக்கிறார். கணவன் மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கின்றனர்.

தேமஹல்லி கிராமத்திற்கு அருகில் இவர்கள் வரும்பொழுது, பூர்ணிமா சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தன் கணவரிடம் கூறி வண்டியை நிறுத்த சொல்லி இருக்கிறார். அவர்களது இரு சக்கர வாகனம் கபினி ஆற்றின் குறுக்கே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பூர்ணிமா சிறுநீர் கழிப்பதற்காக தான் சென்றிருக்கிறார் என்று நம்பிய கணவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பூர்ணிமா திடீரென்று அந்த ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து இருக்கிறார். இதனைப் பார்த்த அவரது கணவன் கெம்பண்ணா அதிர்ச்சி அடைந்து தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக தானும் ஆற்றில் குதித்திருக்கிறார்.

இரண்டு பேரும் ஆற்றின் நீரில் மூழ்கி உயிர் இழக்கும் நிலையில் அவர்களது குழந்தை பரிதாபமாக இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு இருந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அம்மா அப்பா இருவரும் உயிர் இழந்ததை என்பதை அறியாத அந்த பச்சிளம் குழந்தை அந்த மோட்டார் சைக்கிள் வாகனத்திலேயே அமர்ந்து கொண்டு கதறி அழுது கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் நடந்ததைப் பற்றி இந்த குழந்தையிடம் கேட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையின் உதவியுடன் ஆற்றில் இறங்கி தேடியுள்ளனர். நீண்ட நேர சோதனைக்குப் பின்னர் பூர்ணிமா மற்றும் கெம்பண்ணா ஆகியோரின் சடலங்களை தீயணைப்பு துறையினர் அந்த ஆற்றில் இருந்து மீட்டு எடுத்தனர். சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது போலீசார் இந்த வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.