மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 2 வருடம் தான்! மனைவியை பார்க்க சொந்த ஊர் சென்ற கணவன்! ஒரே நாளில் இருவருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டத்தில் பிச்சம்பட்டி என்னும் கிராமமுள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் தர்மர். இவருடைய வயது 30. இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஜான்சிராணி. 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தன்னுடைய வீட்டிற்கு பின்புறத்தில் இருந்து மின்சாரம் எடுத்து இருந்தார். இத்தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் கணவனும் மனைவிக்கும் இடையே அதிக அந்நியோன்யம் இருந்து வந்தது.
தன் மனைவியை காண்பதற்கு அடிக்கடி தர்மர் திருச்சிக்கு வந்து செல்வார். அதுபோன்று சென்ற வாரம் அவர் வந்திருந்தார். குளியலறைக்கு அருகே கம்பி மீது போடப்பட்டிருந்த கயிற்று துணியை காய வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக துணி கீழே விழுந்துள்ளது. ஜான்சிராணி துணியை எடுக்க முயன்ற போது தவறுதலாக அவருடைய முடி மின் கம்பியின் மீது பட்டுள்ளது.
இதனால் இவருடைய உடல் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. தன்னுடைய மனைவியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது கண்ட தர்மர் பதறி அடித்துக் கொண்டு அவரை காப்பாற்ற சென்றார்.
அவருடைய உடலிலும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.