சைதை துரைசாமிக்கு ஆரம்பத்திலே உட்கட்சி குடைச்சல்

‘’மேயர் வேட்பாளராக சைதை துரைசாமியை நிறுத்தக்கூடாது என்று கட்சிக்குள் நிறைய உள்ளடி வேலைகள் நடந்தன. ஏனென்றால் அவரும் சம்பாதிக்க மாட்டார், அடுத்தவர்களையும் சம்பாதிக்க விட மாட்டார். அதனால் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த பெயர்களில் சைதை துரைசாமியின் பெயர் இல்லவே இல்லை.


என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 4

பெருநகர சென்னை மேயருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தானே முறை… சைதை துரைசாமி பதவியேற்பு விழாவிற்கு ஏன் நீதிபதி வரவில்லை..?

இதற்கு அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி சொன்ன பதில் என்ன தெரியுமா..?

‘’மேயர் வேட்பாளராக சைதை துரைசாமியை நிறுத்தக்கூடாது என்று கட்சிக்குள் நிறைய உள்ளடி வேலைகள் நடந்தன. ஏனென்றால் அவரும் சம்பாதிக்க மாட்டார், அடுத்தவர்களையும் சம்பாதிக்க விட மாட்டார். அதனால் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த பெயர்களில் சைதை துரைசாமியின் பெயர் இல்லவே இல்லை.

மேயர் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முதல் நாள், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியில் சைதை துரைசாமி கலந்துகொண்டார். அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூரில் அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய நேரத்திலும் சைதை துரைசாமியை அவர் பார்த்தார். சைதை துரைசாமி தலைவர்களின் வரிசையில் நில்லாமல் தள்ளி நிற்பதைப் பார்த்ததும் ஜெயலலிதா முகத்தில் சில மாற்றங்கள் தென்பட்டன.

உடனே தலைமைக் கழக அலுவலர் மகாலிங்கத்தைப் பார்த்து, ‘’மேயர் வேட்பாளர் பட்டியலை வீட்டுக்கு எடுத்து வாருங்கள்’’ என்று உத்தரவு பிறப்பித்துவிட்டுச் சென்றார்.

ஏற்கெனவே 2003 இடைத் தேர்தல் தொடங்கி 2009 வரை, ‘என்னை நம்புங்கள்… இதைவிட நல்ல பதவி தருகிறேன்’ என்று சைதையிடம் ஜெயலலிதா சொல்லியிருந்தார். கொளத்தூர் தொகுதியில் தோற்றுப்போன நேரத்திலும், ‘’கவலைப்படாதீர்கள், நல்ல பதவி தருவேன்’’ என்று ஜெயலலிதா வாக்கு கொடுத்திருந்தார்.

அதனால்தான், மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த பட்டியலில் அவர் பெயர் இல்லை என்றாலும், ஜெயலலிதாவே முன்வந்து சைதையின் பெயரை அறிவித்தார். இதனை நிர்வாகிகளால் ஏற்க முடியவில்லை. அதனாலே அவர்கள் மேயர் தேர்தலில் மனப்பூர்வமாக வேலை பார்க்கவில்லை. சில இடங்களில் சைதையை தோற்கடிக்கும் உள்ளடி வேலையும் செய்தனர். ஆனால், முதல்வர் மற்றும் சைதை துரைசாமிக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு, அதிமுக தொண்டர்களின் ஆதரவு காரணமாக சைதை மாபெரும் வெற்றி அடைந்துவிட்டார். ஆனாலும் அவர்கள் அடங்கவில்லை.

உட்கட்சி பூசலின் ஒரு பகுதியாகத்தான் பதவியேற்பு விழாவிற்கு தலைமை நீதிபதியை அழைக்கவில்லை. இன்னும் நிறைய குடைச்சல் கொடுப்பார்கள்…’’ என்றார். உட்கட்சித் துரோகிகளை எப்படி