தெரு நாயை ஒரே வாயில் லபக் என விழுங்கிய மலைப்பாம்பு! பட்டப்பகலில் ஊருக்குள் நிகழ்ந்த பரபர சம்பவம்!

மலைப்பாம்பு ஒன்று தெருநாயை விழுங்கி பின்னர் கக்கிய சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூர் எனும் இடம் அமைந்துள்ளது. உதய்ப்பூர் பகுதிக்கு உட்பட்ட வனத்திலிருந்து ஆர்வலர் ஒருவர் எடுத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காட்டுப் பகுதியில் வசித்து வரும் 13 அடி நீளமுள்ள கொடுமையான மலைபாம்பானது அப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாயை முழுவதுமாக விழுங்கியுள்ளது. இதனை கண்ட மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்த தெரு நாயை பாம்பானது ஒரு இடத்தில் கக்கியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த வனப்பகுதியை சுற்றி வாழும் மக்கள் ராட்சத மலைப்பாம்பை காண்பதற்கு கூடினர். அப்போது அங்கு இருந்த வனத்துறை ஆர்வலர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த வீடியோவானது காண்போர் நெஞ்சை அதிர வைப்பது போன்று அமைந்துள்ளது.