நேற்று ஒரே நாளில் 360-க்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸால் மரணமடைந்த சம்பவமானது இத்தாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரானாவுக்கு ஒரே நாளில் 368 பேர் பலி! உலகை உலுக்கும் தகவல்! எந்த நாட்டில் தெரியுமா?
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 6400-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,69,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனா நாட்டில் வேகம் குறைந்ததை தொடர்ந்து, இத்தாலி மற்றும் ஈரான் மாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் இத்தாலியில் 360 பெயர் வைரஸ் தாக்குதலில் மரணமடைந்தனர். ஈரான் நாட்டில் 113 பேர் நேற்று மரணமடைந்தனர். ஸ்பெயின் நாட்டில் மரணங்கள் நேற்று இரட்டித்தன.
அந்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் வீதி வீதியாக சென்று மக்களிடம் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். ஈரான் நாட்டில் இயங்கி வரும் இஸ்லாம் மதத்தின் 3-வது பெரிய மசூதியும் மூடப்பட்டுள்ளது. சென்ற வாரமே மக்கள் மசூதிக்கு வெளியே நின்று தொழுகை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும், வருபவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். அமெரிக்கா நாட்டில் எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் விமான நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியா, இலியானிஸ் ஆகிய நகரங்களில் மதுபான பார்களுக்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. பாஸ்டன் நகரில் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் உலகம் முழுவதும் மிகப்பெரிய கடினமான சூழலை உலக மக்கள் சந்தித்து வருகின்றனர்.