குலுங்கியது சென்னை..! ஒன்று சேர்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள்! ஆளும் கட்சியை மிரள வைத்த நிகழ்வு! ஏன் தெரியுமா?

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.


குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பலவகையான போராட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் பேரணி தொடங்குவதாக திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த பேரணிக்கு தலைமை தாங்க தலைவரான சும்சுல்லுக்கா ஆலந்தூர் நீதிமன்றத்திற்கும் வந்து பேரணியை தொடங்கி வைத்தார். 40,000 பேருக்கு அதிகமாக இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். கலந்துக்கொண்டவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. சின்னஞ்சிறு சிறுவர்கள் கூட இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறப்படுகிறது. 

இந்த பேரணியில் மிகவும் நீளமான தேசிய கொடியும், அமைப்பின் கொடியும் ஏந்தி சென்றனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு வகையான கோஷங்களை எழுப்பியும் பேரணியில் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி கொண்டும் முழக்கமிட்டு சென்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தில்லையாடி வள்ளியம்மை சுரங்கப்பாதை வழியாக மேடைக்கு சென்று உரையாற்றினார்கள். இந்த பேரணியில் சட்டமன்ற உறுப்பினரான தமிழ் மூன்றையும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.