சீக்கிரமே உனக்கு டிரான்ஸ்ஃபர்! தகவலை கேட்டு உயிரையே விட்ட டீச்சர்!

டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைத்த அதிர்ச்சியில் ஆசிரியை மாரடைப்பில் இறந்த சம்பவமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூரில் திருபுவனம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய பள்ளி இயங்கி வருகிறது. இங்கு லதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 49.கல்வி துறையில் பணி நிரவல் அடிப்படையில் இட மாற்றத்திற்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. திருவிடைமருதூர் வட்டாரத்தில் 12 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைத்த ஆசிரியர்கள் அனைவரும் 12-ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு சென்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கை விட்டுள்ளது. இதற்கேற்றவாறு ஏற்கனவே பணியாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆசிரியை லதா பட்டுக்கோட்டை அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை கேட்ட உடன் ஆசிரியை லதா மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார். உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த செய்தியானது அவருடன் பணியாற்றிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது திருப்புவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.