பிரபல நடிகையின் 3-வது காதலும் முறிந்துள்ள செய்தியானது கோலிவுட்டில் வைரலாகி வருகிறது.
மீண்டும் பிரேக் அப்..! காதலன் விக்கியை துரத்தி அடித்த நயன்..? ஒரே நாள் இரவில் நிகழ்ந்த சம்பவம்!

கோலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளுள் நயன்தாரா முதன்மையாக திகழ்ந்து வருகிறார். இவருடைய ரசிகர்கள் இவரை "லேடி சூப்பர்ஸ்டார்" என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் சூப்பர் ஸ்டாருடன் நடித்த "தர்பார்" திரைப்படமானது இந்த வார இறுதியில் வெளியாக உள்ளது. அடுத்து இவர் "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலத்தில் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் ரசிகர்கள் ஏராளமானோர் இவரை பின்பற்றி வருகின்றனர். சினிமா வாழ்க்கையில் கொடிகட்டி பறந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளார். இதுவரை 2 முறை காதல் முறிவினால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
அதன் பிறகுதான் இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நெருங்கி பழக தொடங்கினார். இருவரும் முதலில் மிகவும் நெருக்கமான நண்பர்களாக பழகி வந்தனர். காலம் செல்ல செல்ல இருவருடைய நட்பும் காதலாக மாறியது. இருவரும் மிகவும் அன்னியோன்யமாக பொது இடங்களில் சுற்றி வந்தனர்.
காதல் நிச்சயம் திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கபட்டது. அதற்கேற்றவாறே இருவரும் கிறிஸ்துமஸ் நாளன்று புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் நடந்த திரைப்பட விழாவில் அவர் தனியாக கலந்துகொண்டது ரசிகர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இருவரின் காதலும் முறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டு விடுமுறைக்கு வெளிநாட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் திருமணம் குறித்து விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா தற்போது திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் முடிவில் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. "நம்பர் 1" இடத்தில் திகழ்ந்து வருவதால் திருமணத்தை அவர் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியானது கோலிவுட் திரையுலகில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.