Heart rate sensor ஸ்மார்ட் வாட்ச்! ஹானரின் பிரம்மிப்பூட்டும் முயற்சி!

சீனா -வை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் ஸ்மார்ட் போன்களை வெளியிடுவதில் ப்ரெசிதி பெற்ற நிறுவனம்.


மேலும் இது ஒரு படி மேலே சென்று ஸ்மார்ட் வாட்சியையும் விற்பனை செய்கிறது. இந்த வரிசையில் நாளை இந்தியாவில் அறிமுகம் ஆகிறது ஹூவாய் வாட்ச் GT. 


இந்த ஹூவாய் வாட்ச் GT விற்பனை நாளை முதல் அமேசான் தளத்தில் ஆரம்பம் ஆகிறது. இதன் சிறப்பம்சமே ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாள்களுக்கு நீடிக்கும் என்பதாகும்.  மேலும் வாட்டர்-ரெசிஸ்டன்ஸ், ரியல்-டைம் ஹார்ட் ரேட் மொனிட்டரிங்(Real time Heart rate monitoring) போன்ற வசதிகளும் அமைந்துள்ளது.


இந்த ஸ்மார்ட் வாட்ச் லைட் ஒஸ் (Light OS) மற்றும் கார்ட்ஸ்-M4 ப்ராஸ்ஸ்ஸர்(Cortex-M4 processor) வசதியுடன் இயங்குகிறது.  இதில் உள்ள ரியல்-டைம் ஹார்ட் ரேட் மொனிட்டரிங்(Real time Heart rate monitoring) மற்றும் GPS மற்றும்  போன்ற வசதிகளை ஆப் செய்து வைத்தால் இதன் பேட்டரி நாள்களுக்கு நீடிக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்நிறுவனம் இரண்டு வகையான வாட்ச்களை அறிமுகம் செய்கிறது.


  1. ஸ்போர்ட்ஸ்
  2. கிளாசிக்


ஹூவாய் வாட்ச் GT ஸ்போர்ட்ஸ் 1.39 அங்குல AMOLED டிஸ்பிலே  மற்றும் பீங்கான் bezels மற்றும் துருப்பிடிக்காத  எஃகு உடன் இணைந்து தயாரிக்கபப்ட்டுள்ளது.


இரண்டு வகையான  வாட்ச்களும் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்த வாட்ச் -ஐ சுலபமாக தண்ணீருக்குள் நீந்தும் போடு கூட அணித்து கொள்ளலாம்.


இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜிபிஎஸ் செயல்பாட்டைக் கொண்டுள்ளது, இது சுகாதார உதவியாளர் பயன்பாட்டிற்கு இணைக்கப்படும் போது பயனர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கப் பயன்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச் -இல்  ஒரு உள்ளமைக்கப்பட்ட Altimeter வருகிறது, பயனர் வழிமுறைகளை திறன் மற்றும் தூக்கம் ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுகிறது.

இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,639.கணக்கிடப்பட்டுள்ளது