விதியை மதியால் மட்டும் அல்ல இப்படியும் வெல்லலாம்! சூட்சமத்தை தெரிஞ்சிக்கங்க!

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை,


1)சஞ்சித கர்மம்

2)பிராப்த கர்மம்

3)ஆகாமிய கர்மம்

இதில்சஞ்சித_கர்மம்என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது, அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்த பிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும்.

”பிராப்த_கர்மாஎன்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாக நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை, இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்க வேண்டும்,

ஆகாமிய_கர்மாஎன்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது. இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது. அனைவரும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியது தான்,

நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், இன்பங்கள், அனைத்தும் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும். அப்படியென்றால் ,நம் கர்ம வினைகள் நீங்க நாம் யாரை பற்ற வேண்டும்?

இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் செய்வதின் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக் கொள்ள முடியும்.

1.யாதனம் - கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.

2.சிரவணம் - இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.

3. கீர்த்தனம் - இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

4. பூஜார்தனம் - அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.

5. ஸ்துதி - இறைவன் நாமத்தை புகழ்ந்து பாடுதல்.

இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர, நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்

வாழ்தலே வழிபாடு”“ வழிபாடே வாழ்தல்