யார் இந்த அய்யனார், மதுரை வீரன்..? குல தெய்வம் தோன்றியது இப்படித்தான்.

சமுதாயத்தில, கோவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பபட்டபொது அல்லது, வழிபடும் முறை பிடிக்காமல் போனதால், தமக்கென்று தனி தெய்வம் தனி வழிபாட்டு முறை தேவை என மக்கள் முடிவெடுத்ததன் விழைவு இந்த கிராம தெய்வங்கள் குல தெய்வ வழிபாடுகள் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.


தன்னுடனோ அல்லது முன்போ பிறந்து தன் குலத்தை, இனத்தை, ஊரை, நாட்டை காக்க நடந்த போரில் உயிரை விட்ட, ஒரு மனிதரை வணங்கும் முறை குல தெய்வ வழிபாடாகும். இவ்வாறு இறந்த ஒருவரை புதைத்து நடுகல் நட்டு, பள்ளிப்படை எனும் கோவில் அமைத்து தன் குலம, பரம்பரை வணங்குவதற்கு ஏற்படுத்திக்கொண்ட தனி வழிபாடு முறை என சொல்லப்படுகிறது.

உதாரணமாக, அய்யனார் தெய்வம். சாஸ்தா எனும் ஹரிஹரனே அய்யனார் என சொல்லப்படுகிறது. ஆனால் கிராமங்களில் வணங்கப்படும் அய்யனாருக்கும் உருவ தோற்றத்திலும் வழிபாட்டு முறையிலும் வேறுபாடு இருக்கிறது. அய்யன் என்ற சொல்லுக்கு மேன்மைதங்கியவர், மதிக்கத்தக்கவர், வணங்கத்தக்கவர் என்ற பொருளும் உண்டு. ஆகவே, ஹரிஹரனோ அல்லது அய்யனாரோ மனிதனாகப் பிறந்து மடிந்து போனவர் என்று கருதப்படுகிறது. சில ஊர்களில், ஒரு சாரர் களிமண் குதிரை செய்து கோவிலில் கொண்டு வைத்தப்பிறகே மற்றவைகள்.

இதேபோன்று, மதுரை வீரன் தெய்வம். இந்த வீரன் தாழ்ந்த குலம் என சொல்லப்படும் ஒரு இனத்தில் பிறந்தவர் என்றும், குலத்தையும் நாட்டையும் காத்து நின்றவர் என சொல்லப்படுகிறது. அரசனின் மகளை காதலித்து திருமணம் செய்ததால் கொல்லப்பட்டார். பிறகு இந்த வீரன் இந்த இனத்தின் வழிபாட்டுக்குரியவராக மாறி தெய்வமானார். நம்பிக்கையின் அடிப்படையில் வேறு இனத்தவரும் தொழில் செய்பவரும் வணங்க தொடங்கினர்.

ஒருகாலகட்டத்தில் தற்பொது உள்ளதுபோல, கௌரவம் மரியாதை, கருத்து வேறுபாடு, பூசல்கள் ஏற்பட்டபோது ஜமீன்தாரர்கள், மன்னர்கள் தலையிட்டு பிடிக்காதவர்களுக்கு தனி வழிபாடு ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இவர்களும் வணங்கத்தக்க ஒருவரை சாமியை ஏற்றனர். இதனைப்போலவே மற்றவர்களும் பார்த்து பின்பற்ற தொடங்கினர். இவ்வாறாக கிராம தெய்வங்களும் குலதெய்வங்களும் தோன்றியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

பெண் தெய்வங்களைப் பொருத்தவரை, தன் குலத்தில் பிறந்து ஏதோ ஒரு காரணத்தால் இறந்துபோன ஒரு பெண்ணை, தன் குலத்தை காத்து நிற்பாள் என்ற நம்பிக்கையுடன் வணங்கத்தொடங்கினர். திருநெல்வேலி மாவட்டத்தில் வணங்கப்படும் பெரும்பாலான பெண் தேவதைகள் அப்போதைய ஜமீன்தார்களால் வஞ்சித்து கொலை செய்யப்பட்டவர்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்த முறையில்தான் கிராமக்கோவில்களும் குலதெய்வம் வழிபாடுகளும் தோன்றியிருக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.