பொங்கல் பண்டிகை எங்கெல்லாம், எவ்வாறெல்லாம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பொங்கல் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் கொண்டாடுகிறோம் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து.


ஆனால், இந்தியா முழுவதும் அறுவடை திருநாளாக இந்திய முழுவதும் விவசாயிகளால் கொண்டப்படுகிறது. இது சூரியன் வடக்கு திசையில் இருந்து தெற்கு பகுதிக்கு இடம் பெயர்வதை மையமாக கொண்டது. இதை தமிழகத்தில் பொங்கல் என்றும், வட மற்றும் மத்திய இந்தியாவில் மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். அந்த வகையில் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என பார்ப்போம்.

உத்திரபிரதேசம், பீகார்; மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மகர சங்ராத்தியாக போற்றப்படுகிறது. இந்நாளில் கங்கை, யமுனை மற்றும் நர்மதா ஆகிய நதிகரைகளில் கொண்டாடப்படுகிறது. மேலும் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சூரியனுக்கு பூஜையில் படைக்கிறார்கள். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இதுவாகும். 

இந்த மகர சங்ராத்தியை ஒரிசா மற்றும் சத்தீஸ்கா; மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். மேலும் இவர்களில் பெரும்பாலனவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும்.

மகராஷ்டிராவில் இந்த பண்டிகையின் போது கருப்பு, எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்பு வகைகளை பரிமாறிக் கொள்வாh;கள். அதே போல் சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்து சூரிய பகவனுக்கு படைப்பார்கள்.

குஜராத் மாநிலத்தில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டாலும், அங்கே பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் காலை முதல் மாலை வரை பட்டங்கள் பறக்க விட்டு மகிழ்வார்கள்.

பஞ்சாப், டெல்லி, இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் லொஹரி என்று கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகையை 13-ம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். மேலும் தெருக்களில் தீ மூட்டி அமர்ந்து கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகளை இறைவனுக்கு படைப்பார்கள்.

அசாம் மாநிலத்தில் போஹாலி பிஹு (உணவுப் பண்டிகை) என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மேலும் இந்த பண்டிகையை நான்கு நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. மேலும் அறுவடை செய்த நிலங்களில் கிடைக்கும் இயற்கை பொருட்களை வைத்து பூஜை செய்து போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதுபோல் எரித்து கொண்டாடுகிறார்கள்.

ஆந்திரா மாநிலத்தில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டாலும், பெரும்பாலும் நம் பொங்கல் திருநாளைப் போல் மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். மகர சங்ராந்தி அன்று சூரியனுக்கு வைத்து பூஜை வழிப்படுவார்கள். மூன்றாம் நாள் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் நடைபெறும்.

கர்நாடகா மாநிலத்தில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக்கு பயன்படுத்திய கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள்.

மொழி வாரியாக மற்றும் இனம் வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் விவசாயமானது அனைத்து மக்களுக்கு தேவைப்படும் விஷயமாகும். எனவே தைப்பொங்களை விளைச்சலுக்கு உதவிய அனைத்து பொருட்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.