கொரோனாவுக்கு மருந்தை இப்போது சொன்னா எப்படிங்க..? அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் அதிர்ச்சி

கொரானா நோயின் ஆரம்ப நிலைக்கு ஹைட்ராக்ஸி குளோர குவின் பயன்படுத்தலாம் என்று 80 நாட்கள் கழித்து நோய் பரவல் முற்றிய நிலையில் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அறிவிக்கிறது‌.


மூத்த அலோபதி மருத்துவர் டாக்டர் விஜயராகவன் ஆலோசனைப்படி மார்ச் 25ல் இருந்து ஹைட்ராக்ஸி குளோர குவின், மருத்துவரின் ஆலோசனை பெற்று தகுதியுள்ள அனைவருக்கும் கொடுத்தால், கோவிட் 19 நோய் தொற்றில் இருந்து தகுதியுள்ள அனைவரையும் காக்கலாம் என்ற ஆலோசனைக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த மருந்து புது மருந்தல்ல, 40 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் மருந்து தான். பழைய மருந்தை உபயோகிக்க சொல்ல மிசிவிஸிக்கு 80 நாட்கள் ஆகும் என்றால், ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

ஏன் செய்யவில்லை? எல்லாம் கூட்டு களவானிகள்‌. 80 நாட்கள் கழித்து ஐ.எம்.சி.ஆர். அதையே பரிந்துரைக்கிறது என்றால், அவசர கால சூழ்நிலையில் நம்மை ஆளுகின்ற மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு உடனடியாக மக்களை பாதுகாக்கும் தீர்வுக்கான வழிகளை ஆராய்கிறார்கள் என்பது விளங்கும்‌. 

அசாதாரண நிலையில் கூட இந்த மத்திய, மாநில அரசுகளும், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனும் மக்களை பற்றி அக்கறை இல்லாமல், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, பணம் பண்ணியது‌. 

இதை தகுதியுள்ள 20 முதல் -55 வயது வரை உள்ள மக்களுக்கு கொடுக்காமல், கொரானா நோய் தோற்று இந்தியாவில் 3 லட்சத்திற்கு மேல் போன பிறகு, இந்தியாவில் இன்றைக்கு 40சதவிகிதம் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நிலைக்கு தள்ளிய பின்பு, நோயின் ஆரம்ப நிலையில் கொடுக்க வேண்டும் என்று நோய் பரவல் முற்றிய நிலையில் சொல்கிறார்கள் என்றால் மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். 

நம்மை ஆளும், நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் தான் இந்த அல்ல நிலைக்கு காரணம்‌ என்பதை நாம் இப்போது கூட புரிந்து கொள்ளாவிட்டால் நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வை நாமே அழிக்கிறோம் என்பது நிச்சயம்‌ என்று தெரிவித்துள்ளார் வெ. பொன்ராஜ்.