நள்ளிரவில் தீப்பற்றிய ஏசி! போராடி குழந்தைகளை காப்பாற்றிய பெற்றோர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் மூச்சுத்திணறிய பெற்றோர், மகன்களை காப்பாற்ற போராடிய நிகழ்வானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை போரூரில் சக்தி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இங்கு உள்ள வீடொன்றில், பிரகாஷ் மேனன் மற்றும் சபிந்து மேனன் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரகாஷ் மற்றும் ஆதித்யா என்னும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

வெளிநாட்டில் பணியாற்றிய பிரகாஷ் மேனன் சமீபத்தில் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தார். இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடைக்கு முன்னர் ஏ.சி.யை பயன்படுத்தியுள்ளனர். சுவிட்சை அணைக்காமல் விட்டதால், கரண்ட் மீண்டும் வந்தபோது மின் கசிவு ஏற்பட்டுள்ளது. ஹாலில் இருந்த சோபா மற்றும் இதர பொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ குடும்பத்தினர் அவதிப்பட்டனர். அப்போது பிரகாஷ் மற்றும் பிந்து மகன்களை காப்பாற்றி வெளியே அனுப்பி விட்டனர். ஆனால் தீயின் வெப்பம் அதிகமானதால், இருவரும் தீப்பிடித்து உள்ளேயே சிக்கியுள்ளனர். பிரகாஷ் மற்றும் ஆதித்யா தீயணைப்பு வீரர்களை அழைத்து தீயை அணைத்தனர்.

உடலில் தீ காயங்களுடன் தம்பதியினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவமானது போரூர் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில், மின்வெட்டு ஏற்பட்டபோது ஏசியை அணைக்காமல் இருந்தனர். மீண்டும் கரண்ட் வந்தபோது மின்கசிவு ஏற்பட்டு உள்ளதால் தீ பரவியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது போரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.