மேல் ஆடையில் ஆணின் விந்தணு! எம்பிபிஎஸ் மாணவி கொலையில் பகீர் திருப்பம்! அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமானது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி சிந்து மாகாணாம் ஆகும். அங்கள்ள கோட்கி பகுதியை சேர்ந்த நம்ரிதா சந்தாரி மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த அவர் கல்லூரி விடுதியில் துணியால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டது போல் சடலமாக கிடந்தார். 

இதையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் மரணத்தை கொலை என பதிவு செய்யவேண்டும் என போலீசாரை வலியுறுத்தினர்.

அதற்கு காரணம் தற்கொலை என்றால் அதற்கான தடயங்கள் இருக்கும் என்றும் ஆனால் தங்கையின் கழுத்தை சுற்றி ஒயர்களால் நெரிக்கப்பட்டது போல் இருப்பதாகவும் தெரிவித்தார். துணியால் தற்கொலை செய்துகொண்டவர் கழுத்தில் எப்படி ஒயர்கள் நெருக்கியதற்கான அடையாளங்கள் இருக்கும் என சந்தேகம் எழுப்பினார்.

2 நாட்களுக்கு முன்னர் தொடர்பு கொண்ட தங்கை எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய நிலையில் தற்போது எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்று வினவிய அண்ணன் இது குறித்து தீவிரமாக விசாரித்து தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அந்த கல்லூரியின் முதல்வர் நர்மிதா சந்தாரி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அந்நாட்டின் பெண்‌ சட்ட மருத்துவ அதிகாரி நர்மிதா சந்தாரி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.

வழக்கு நடைப்பெற்று வரும் சமயத்தில், இந்த பிரேத பரிசோதனை அறிக்கையானது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு மக்கள் கேட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.