ஒரேயடியாக குண்டு போட்டு டெல்லி மக்களை கொன்று விடலாமே! காற்று மாசுபாடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லியில் நிலவிவரும் காற்று மாசுபாடு காரணமான வழக்கு ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெடிகுண்டுகள் மூலம் மக்களை ஒரேயடியாக கொன்று விடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


டெல்லியில் சில மாதங்களாகவே காற்று மாசுபாட்டின் அளவு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு பற்றிய வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக விவசாய கழிவுகளை தொடர்ந்து எரித்து வருகின்றனர்.

இதனால் டெல்லியில் உள்ள என்சிஆர் பகுதியில் வாழும் மக்கள் மூச்சு விட முடியாமல் சுவாசக் கோளாறு பிரச்சினைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்நாள் குறைந்து வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு தவறிய மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கேஸ் பெட்டகத்தில் வாழும்படி ஏன் மக்களை கட்டாய படுத்துகிறீர்கள் இதற்கு பதிலாக அவர்கள் மீது வெடிகுண்டு போட்டு அவர்களை கொன்று விடலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய மாநில அரசுகளும் ஒன்றாக இணைந்து டெல்லியில் காற்றை சுத்தப்படுத்தும் கோபுரங்களை எழுதுவதற்கு தொடர்பான திட்டத்தை இன்னும் 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.