பழம்பெரும் பெட்டிக்குள் குழந்தை சடலம்! முனகியபடி சிறுமி! சென்னையை பதற வைத்த சம்பவம்!

கண்ணாமூச்சி விளையாட்டை அனைவரும் நம் குழந்தை பருவத்தில் விளையாடி இருப்போம். ஆனால் இந்த விளையாட்டு ஒரு சிறுமியின் உயிரைக் பறித்த நிகழ்வு அனைவரையும் மிகுந்த ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


திருவான்மியூர் பகுதி சென்னையில் மிகவும் பிஸியான இடமாகும். இந்தப்பகுதியை சேர்ந்தவர் திருப்பதிசாமி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகளுள்ளனர். அவர்களின் பெயர் தனஸ்ரீ, தனுஜா என்பதாகும்.கணவன் மனைவி இருவரும் பணிபுரிகின்றனர். வழக்கம்போல நேற்றும் பணிக்கு சென்றனர்.குழந்தைகள் இருவர் மட்டுமே வீட்டிலிருந்தனர்.

வேலை முடிந்து வீடு திரும்பிய போது இரு மகள்களும் இல்லாததைக் கண்டு திருப்பதி சாமி பேரதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் குழந்தையை தேடினார். வீட்டின் மாடியில் இருந்த அழுக்குப்படிந்த மரப்பெட்டியில் இருந்து சத்தம் வந்தது. உடனே அப்பெட்டியை திறந்து பார்த்தனர். இரு குழந்தைகளும் வாந்தி எடுத்தபடி மயங்கிக் கிடந்துள்ளனர்.

இதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாருலதாவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டின் போது இரு குழந்தைகளும் மரப்பெட்டிக்குள் அமர்ந்துள்ளன. பெட்டியை மூட முயற்சித்த போது பெட்டி தாளிட்டுக் கொண்டது. இதன் காரணமாக இரு குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சோகச் சம்பவம் எடுத்துரைத்துள்ளது