பிக்பாஸில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது ஏன்? முன்னாள் போட்டியாளர் கூறிய புதிய தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டதன் காரணம் பொய் என்று கூறுகிறார் நடிகர் பரணி.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டார்.

சரவணன் தன்னுடைய இளமை காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களிடம் தகாத வாறு நடந்து கொண்ட சம்பவத்தை அவரே கமலஹாசன் முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதற்குப் பின் இந்த சம்பவத்தைக் குறித்து நிபந்தனையின்றி தன் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும் கூறினார் சரவணன். 

இதற்குப் பின்பு பத்து நாட்கள் கழித்து நடிகர் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென்று கடந்த  ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டதன் காரணமாக பிக்பாஸ் சரவணனிடம் , பெண்களுக்கு எதிராக குற்றத்தில் ஈடுபட்டதால் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் படுகிறார்கள் என்று கூறினார் .

சரவணனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அதற்குப் பிறகு சரவணனுக்கு ஆதரவாக , பலரும் தங்களுடைய கண்டனங்களை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக  தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற பரணி , சரவணனை நேரில் சந்தித்து பேசியதாக கூறினார்.  சரவணனும் பரணியும் மிகவும் நெருங்கிய  நண்பர்கள்.

சரவணனை நேரில் பார்த்த பின்பு பரணி  பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அதற்கான காரணம் பொய்யானது எனவும் அவரால் தன்னுடைய குழந்தையை பார்க்காமல் இருக்க முடியாது என்ற காரணத்தால் அவர் திடீரென்று வெளியேற்றப்பட்டார் என்றும் கூறினார்.

சரவணன் தன் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கடந்த மூன்று நாட்களாகவே பிக் பாஸ் இடம் கூறிவந்துள்ளார் . இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதாக பரணி கூறி வருகிறார் .