நான் புலிக்கு உணவாகப் போகிறேன்..! சுற்றி இருந்தவர்களை மிரள வைத்த இளைஞன்! பதைபதைப்பு சம்பவம்!

புலிகள் நடமாடும் இடத்தில் திடீரென்று இளைஞர் ஒருவர் குதித்த சம்பவமானது மத்தியப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் இந்தூர். இங்கு புகழ்பெற்ற உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு புலிகள் தனியாக ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதிக்குள் மனிதர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை.

எதிர்பாராவிதமாக மது போதையிலிருந்த நபர் ஒருவர் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடாத பகுதியில் குதித்துள்ளார். அப்போது புலியிடம் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் எழுப்பப்பட்டிருந்த தடுப்பு வேலியின் மீது ஏறிக்கொண்டு உயிருக்கு பயந்து அலறியுள்ளார். 

கீழே புலிகளும் அவர் விழுவதற்காகவே காத்துக்கொண்டிருந்தன. அவருடைய அலறல் சத்தத்தை கேட்ட பூங்கா ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு பிறகு அவரை அங்கிருந்து மீட்டெடுத்தனர். 

இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.