பள்ளிக்கூடம் சென்றால் அட்ஜெஸ்ட் செய்யச் சொல்றார்! டீச்சருக்கு ஹெட்மாஸ்டரால் நேர்ந்த விபரீத அனுபவம்!

தலைமை ஆசிரியரின் தொந்தரவால் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் சித்தலூர் எனும் இடம் அமைந்துள்ளது.  இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த பள்ளியில் பிரிட்டோ என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த ஆசிரியையிடம் தொடர்ந்து சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அந்த ஆசிரியை தவிர்க்க முற்பட்டும் அவரால் இயலவில்லை. தன் சக ஆசிரியையைகளிடம் இதுப்பற்றி கூறியுள்ளார். அவர்கள் தலைமையாசிரியருக்கு அனுசரித்து செல்லுமாறு கூறியுள்ளனர். தகவல் வெளியே தெரிந்தால் அந்த ஆசிரியரை கொலை செய்து விடுவதாக பிரிட்டோ மிரட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி பள்ளிக்கல்வித்துறை ஆசிரியை கடிதம் எழுதிவிட்டு வளாகத்திலேயே எலி மருந்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

ஆசிரியையின் இந்த செயலை கண்ட சக ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பள்ளி கல்வி அலுவலர் ஆசிரியை மருத்துவமனையில் சந்தித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த சம்பவமானது சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.