கமலின் இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்படுகிறது? லைக்கா பின்வாங்கியதாக தகவல்!

1996-ஆம் ஆண்டு கமல் ஹாசன் நடித்து, ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் மாபெரும் வெற்றியடைந்தது. மக்களிடம் மிகுந்த வரவேற்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.


 சில மாதங்களுக்கு முன்பு கமல் ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் இசையமைப்பாளர் அணிருத் ஆகியோரை வைத்து இயக்குனர் ஷங்கர் "இந்தியா-2" படத்தை இயக்குவதாக அறிவித்தார்.அறிவிப்பிற்கு முன்னரே கமல் ஹாசன் அவர்கள் " மக்கள் நீதி மய்யம் " என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

அவர் மக்களவை தேர்தலிலும் ,18 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் களம் காண்கின்றார் .தற்போதைய கமலின் அரசியல் பிரவேசம் காரணமாகவும், அவருடைய நேரமின்மையாலும்,நிறைய முறை படப்பிடிப்பு தள்ளிப்போக நேர்ந்தது.

கடந்த சில வாரங்களாக இப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.இதற்கு காரணம், கமல் ஹாசன் தன்னுடைய அரசியல் பிரச்சார வீடியோவில் " தான் தன்னுடைய சினிமாப்பற்றை விடுத்தே அரசியல் வந்திருக்கிறேன்" என்று மிகவும் வருந்தியதே என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

ஆனால் சிலர் மே-23‌-ல் மக்களவைத் தேர்தல் பிறகு தொடங்குவார் என்று வியூகிக்கின்றனர். அதே சமயம் கமல் ஒரே மனநிலையில் இல்லாத காரணத்தினால் இந்த படத்தை தொடர்ந்து தயாரிக்க லைக்கா தயங்குவதாகவும் கூறுகிறார்கள். இருந்தாலும் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.