கேஎல் ராகுலின் ஸ்டைலிஸ் பிளேயர் விருதை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?

கடந்த ஒரு மாதமாக கிரிக்கெட் திருவிழா இந்தியாவை அலங்கரித்து கொண்டிருந்தது. ஐபிஎல் தொடர் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.மிக மிக விறுவிறுப்பாக நடந்த இறுதியாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


இறுதியாட்டம் முடிந்த பிறகு பல்வேறு அவார்டுகள் வழங்கப்பட்டன. வெற்றிக்கோப்பை, தொடரில் அதிகபட்ச ரண்களை குவித்ததற்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து "ஸ்டைலிஷ் ப்ளேயர் ஆஃப் தி இயர்" ( stylish player of the year") விருது வழங்கப்பட்டது. இது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.ல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவரால் வர இயலாததால், ராகுல் சார்பில் அந்த விருதை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா வாங்கிக்கொண்டார். 

இதனை நெட்டிசன்கள் வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். அதாவது வருடத்தொடக்கத்தில் "காஃபி வித் கரண்" ("Coffee With Karan") என்னும் நிகழ்ச்சியில் ராகுலும், பாண்டியாவும் பங்கேற்றனர்.

அதில் ஹர்திக் பாண்டியா தான் நிறைய பெண்களுடன் படுத்திருப்பதாகவும், அது என் வீட்டிலுள்ளவருக்கும் தெரியும் என்று கூறினார்.  இதனால் பிசிசிஐ இவர்கள் இருவரையும் நான்கு மாதங்களுக்கு தடை செய்தனர்.

இதில் ராகுலின் தவறு ஏதுமில்லை என்று பலரும் கருதினர். இந்த சம்பவத்தையும், விருது சம்பவத்தை சம்பந்தப்படுத்தி நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.