தோனி சகாப்தம் முடிந்துவிட்டது..! அவ்வளவு தான்..! ஹர்பஜன் சொல்லும் பகீர் காரணம்! என்ன தெரியுமா?

சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் தோனி இடம் பெறாத காரணத்தினால் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக இனிமேல் தோனி விளையாடுவது மிக கடினம் என்று கூறியுள்ளார்.


2019 2020 ஆம் ஆண்டின் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. பிசிசிஐ தற்போது 2019 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் 2020 ஆம் ஆண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் A+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் உள்ளனர். மற்ற பிரிவுகளில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் தோனியின் பெயர் இந்தப் பட்டியலில் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் பெயர் இடம் பெறாததால் அவர் இந்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் கூட மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது கடிதம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தோனி ஏற்கனவே அவரது கடைசி ஆட்டத்தை இந்திய அணிக்காக ஆடி விட்டார் என்று நினைக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தோனி சகாப்தம் முடிந்துவிட்டது என்பதை மறைமுகமாக ஹர்பஜன் கூறியுள்ளார்.