நாட்டுக்காக உயிர் தியாகம்..! சவப்பெட்டியில் ராணுவ வீரனின் உடல்..! வைத்த கண் வாங்காமல் பார்த்த மனைவி! இதயத்தை நொறுங்க வைத்த சம்பவம்!

காஷ்மீரில் ஹண்ட்வாரா தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் அனுஜ் சூத்தின் உடலை, அவரது மனைவி வைத்த கண் வாங்காமல் நொறுங்கிய இதயத்துடன் பார்த்த அந்த நிமிடங்கள் காண்போரின் நெஞ்சங்களை உறைய வைக்கும் விதமாக அமைந்துள்ளது.


கடந்த சனிக்கிழமை அன்று வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஹந்த்வாரா சங்கிமுல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து நம்முடைய வீரர்களும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம் கர்னல், மேஜர், 2 ராணுவ வீரர்கள், போலீசார் உட்பட 5 பேர் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த மேஜர் அனுஜ் சூத்தின் உடலை, அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு அவருடைய உடல் நல்ல முறையில் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் போது வீர மரணம் அடைந்த மேஜர் அனுஜ் சூத்தின் உடலை, பார்த்த அவரது மனைவி அக்ரிதி சூட் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உயிரிழந்த ராணுவ வீரின் மனைவி அக்ரிதி கண்ணசைக்காமல் நொறுங்கிய இதயத்தோடு தன் கணவரையே பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


உறைந்த ராணுவ வீரரின் உடல் பஞ்ச்குலா வீட்டிலிருந்து சண்டிகரில் உள்ள மணி மஜ்ரா தகன மைதானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் வைத்து கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு குண்டுகள் முழங்க உரிய மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதி நிமிடங்களின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்விட்டரில் பல்லாயிரக்கணக்கான இணையதள வாசிகளால் பகிரப்பட்டு வருகிறது. இதயத்தைத் தூண்டும் இந்த புகைப்படங்களில், அக்ரிதி சூட் சவப்பெட்டியின் அருகில் உட்கார்ந்து கணவரின் முகத்தை அமைதியாக வருத்தத்துடன் பார்த்த அந்த பார்வையை சொற்களால் விவரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இவர்களின் வீர மரணங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இவர்களின் தியாகத்தையும் துணிச்சலையும் நாடு ஒருபோதும் மறக்காது என்று கூறியுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.