உருளை கிழங்கு விவகாரம்! விவசாயிகளிடம் பணிந்த கார்ப்பரேட் ஜெயன்ட் பெப்சி!

குஜராத் விவசாயிகள் மீது மேற்கொண்டு வந்த சட்ட நடவடிக்கையை கைவிடுவதாக, பெப்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.


குஜராத்தில் உள்ள விவசாயிகள் 4 பேர், தனது நிறுவனம் காப்புரிமை வாங்கியுள்ள எஃப்சி5 ரக உருளைக்கிழங்கை பயிரிடுவதாகக் கூறி சமீபத்தில் பெப்ஸிகோ வக்கீல் நோட்டீஸ் விட்டது. இதன்பேரில், அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்று வந்தது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் 4 பேரும் தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு தரும்படியும் பெப்ஸிகோ மிரட்டியது.

இந்நிலையில், திடீரென தற்போது விவசாயிகள் மீதான சட்ட நடவடிக்கையை கைவிடுவதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு இயந்திரத்துடன் விவாதித்த பிறகு, இம்முடிவை மேற்கொள்வதாக, பெப்ஸிகோ கூறியுள்ளது.

அதேசமயம், இந்துத்துவ இயக்க பிரதிநிதிகள் சிலர், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பிரச்னையை, பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், உடனடியாக, மோடி தலையிட்டு, விசயத்தை முடித்துவைத்ததாக, தகவல்கள் குறிப்பிடுகின்றன.