தாலி கட்டிய அடுத்த சில நிமிடம்! மணமேடையிலேயே சடலமாக சரிந்த மணமகன்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

தெலுங்கானாவில் திருமணத்தின்போது சரிந்து விழுந்து மாரடைப்பால் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 25). இவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது . இவர்களது திருமணத்தில் நண்பர்கள் உற்றார் உறவினர் என அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

திருமணத்திற்கு பின்பு மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற மணமகன் சில நேரத்திலேயே திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இதனைக் கேட்ட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தன் கணவர் உயிரிழந்ததை கேட்ட புதுப்பெண் மனமுடைந்து போயிருக்கிறார்.

அதாவது திருமணத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜே ஒலியினால் கணேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.