பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. இதில் ஏராளமான நியூட்ரிஷியன்கள் இருப்பதால் பலன்களும் அதிகம்.


·         உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும் தன்மை பச்சை பட்டாணிக்கு இருக்கிறது.

·         நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இருப்பதால் தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படுகிறது.

·         கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால் பச்சை பட்டாணி உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரிகிறது. வைட்டமின் கே இருப்பதால் எலும்புகள் வலுப்படவும் பயன்படுகிறது.