கிறிஸ்தவ ஆலயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் வரவேற்பு..!

சிறுபான்மையினர் வாக்குகள் எல்லாமே தி.மு.க..வுக்குத்தான் விழப்போகிறது என்ற உடன்பிறப்புகளின் நம்பிக்கையை குலைக்கும் வகையில், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அன்பை பொழியத் தொடங்கியுள்ளனர்.


இதையடுத்தே தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்யும் தமிழக முதல்வருக்கு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்கள் வரவேற்பு கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு சென்று பிரார்த்தனை மேற்கொண்டார் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அந்த நேரத்தில், பேராலயத்தின் சார்பில் பேராலய பங்குத்தந்தை A.M.A.பிரபாகர் அவர்கள் முதல்வருக்கு நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இதையடுத்து நாகூர் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மக்களின் மனம் கவர்ந்தார்.