அரசாணையை திருப்பித்தர லஞ்சம் கேட்டு மிரட்டிய சார்பதிவாளர். புதுக்கோட்டையில் அடுத்து நடந்த அதிரடி சம்பவம்

சார்பதிவாளர் ஒருவர் அரசு முத்திரையிட்ட பத்திர தொகையை திருப்பித்தர 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் லேனா விளக்கு பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள ஏனப்பட்டி பகுதியில் உள்ள 16 1/2 ஏக்கர் அளவான விவசாய நிலத்தை தனியார் நிறுவனமொன்று தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு எழுதி கொடுத்தது. இருசாரார் வழக்கறிஞர்களும் புதுக்கோட்டை அரசு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு 39 ஆயிரம் தொகையை செலுத்தி முத்திரை பதித்த ஆவணத்தை பெற்றுள்ளனர். அங்கு பணியாற்றும் சார்பதிவாளரின் பெயர் மகாலட்சுமி. அவர் அந்தப் பத்திரத்தை திருப்பித் தருவதற்கு காலம் தாழ்த்தியுள்ளார். மேலும், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் இடத்தைப்பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பல நாட்கள் கழித்து அந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் அந்த அரசு நிறுவனத்தின் தனியார் அறை ஒன்றில் தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்களிடம் 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு தொண்டு நிறுவனத்தினர் மறுப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட டிஐஜியிடம் புகாரளித்தனர்.

ஆனால் அந்த டிஐஜி ஒருதலைப்பட்சமாக சார்பதிவாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதனை பதிவுத்துறை தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.பொதுத்தொண்டு நிறுவனத்தினர் வழக்கை வேறு ஒருவரை வைத்து நடத்துமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்ற பதிவுத்துறை தலைவர், டி.ஐ.ஜி சுதா மால்யா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சுதா அவர்கள் விசாரணை நடத்த தொடங்கினர்.இந்நிலையில் சார்பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொண்டு நிறுவனம் கூறியுள்ளனர். இதனை விசாரித்த டி.ஐ.ஜி சுதா மால்யாவிடம் இது சம்பந்தப்பட்ட வீடியோவை தொண்டு நிறுவனத்தினர் அளித்துள்ளனர்.

இதன் மீது நடவடிக்கை எடுக்க சுதா அவர்கள் ஒப்புக்கொண்டதாக தெரியவருகிறது. இந்த சம்பவமானது அரசாங்க அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-