மனைவி, மகனை ஒதுக்கி வைத்துவிட்டு இளம் பெண்ணை 2வது மனைவியாக்கிக் கோலி சோடா நடிகர்!

கோலிசோடா படத்தில் நடித்த பிரபல நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பல்வேறு மலையாளத் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் ஆவார். மலையாள படங்களோடு தன்னுடைய திரைப்பயணம் நின்றுவிடக் கூடாது என எண்ணி தமிழிலும் கோலி சோடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் அந்தத் திரைப்படத்தில் தில்லை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான் கிரிஸ் செம்பன் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி விவாகரத்து செய்து கொண்டனர். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக வந்து கொண்டிருந்தது.

தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் நடிகைகள் அனைவருமே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் மரியம் தாமஸ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது திருமணம் செய்துகொண்டது தகவலை நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.