மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்க விலை!!! கடும் அதிர்ச்சியில் மக்கள்

தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது மக்களிடையே கடும் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.


ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்திருந்தது. நேற்றைய ஒரு சவரன் தங்கத்தின் விலை 28,664 ரூபாய். ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,583 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 35 ரூபாய் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை குறைந்திருந்தது.

இதனால் மக்கள் கூட்டம் நகை கடைகளில் வெள்ளி மற்றும் தங்கம் வாங்க அதிகரித்தது. 

ஆனால் இன்று நேற்றைக்கு மாறாக, தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 192 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று ஒரு சவரன் விலையானது 28,856  ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. ஆபரண தங்கமானது ஒரு கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து 3,607 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியானது 47 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகின்றது. ஒரு கிலோ பார் வெள்ளியானது 100 ரூபாய் குறைந்து 47,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை நாள் மக்கள் படும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.