மீண்டும் விண்ணைத் தொட்டது தங்கத்தின் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? இல்லத்தரசிகளுக்கு கடும் ஷாக் கொடுக்கும் தகவல்!

தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்திற்கு சென்று ஒரு ரூபாய் 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலமாகவே மிக அதிகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்த வருடம் ஆரம்பித்தவுடன் தங்கத்தின் விலை மேலும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை எட்டியது. ஆனால் அதன் பின்னர் தங்கத்தின் விலையில் சற்று ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை பற்றி 31 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 31 ஆயிரத்து 8 ரூபாயை எட்டியுள்ளது.

வெள்ளியின் விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளார் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.