ஏறிக்கொண்டே போகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை. செய்வதறியாது மக்கள் கலக்கம்!

சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.


பிப்ரவரி 13 ஆம் தேதியிலிருந்து தங்கம் விலை கிடுகிடுவென்று ஏறிக்கொண்டே வருகிறது. 13 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,264//- அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,177 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 33,416 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,978/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 31,824 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,012/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 32,096/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288/- அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,213/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 33,704/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

21.2.2020 - 1 grm – Rs. 4,213/-, 8 grm – 33, 704/- ( 24 கேரட்)

21.2.2020 – 1 grm – Rs. 4,012/-, 8 grm – 32,096/- (22 கேரட்)

வெள்ளி விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 700/- அதிகரிக்கத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.51.60 ஆகவும் கிலோவுக்கு ரூ.51,600 ஆகவும் இருந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 52.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.52,300/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..