ஒரு வாரத்தில் தங்கம் விலை கிடுகிடுவென ரூ.400 குறைவு..! இன்னும் குறையுமா?

சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் கொண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் உண்டாகிறது.


நவம்பர் மாதம் 20 ஆம் தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.30,600 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலையில் குறைந்து கொண்டே வந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,779 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,232 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,618 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 28,944 ஆகவும் இருந்தது. 

ஆனால் இன்று சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,614 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,912 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,775 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

27.11.2019 - 1 grm – Rs. 3775/-, 8 grm – 30,200/- ( 24 கேரட்)

27.11.2019 – 1 grm – Rs. 3614/-, 8 grm – 28,912/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 47.90 ஆகவும் கிலோ ரூ.47,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..