திடீரென குறைந்த தங்கம் விலை! நகைக்கடை சென்ற பெண்கள் இன்ப அதிர்ச்சி! ஆனால்..! எச்சரிக்கும் வியாபாரிகள்!

ஆபரண தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் தங்கம் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.


ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய ஒரு சவரன் தங்கத்தின் விலை 28,664 ரூபாய் ஆகும். ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,583 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 35 ரூபாய் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 48 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.  பார் வெள்ளியானது 700 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 48,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் நகை கடைகளில் வெள்ளி மற்றும் தங்கம் வாங்க அதிகரித்துள்ளது. 

திடீரென தங்கம் விலை குறைந்ததால் இன்று நகை வாங்கிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் இந்த விலை குறைவு நீடிக்காது என்று வணிகர்கள் எச்சரிககின்றனர்.