300 முத்தூட் நகை அடகுக்கடைகள் மூடப்படுகின்றன..! உரிமையாளர் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்!

ஊழியர்கள் போராட்டத்தால் பிரபல  நிறுவனத்தின் 300 கிளைகள் மூடப்படப்போகும் சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல தனியார் நிதி நிறுவனங்களுள் முத்தூட் பின்கார்ப் நிறுவனம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தலைவரின் பெயர் ஜார்ஜ் அலெக்சாண்டர். கேரளா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 முத்தூட் கிளைகள் இயங்கி வருகின்றன.

இங்கு பணிபுரியும் பணியாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ் ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேரள மாநிலத்தில் முத்தூட் நிறுவனத்தின் பங்கானது 10 சதவீதத்திலிருந்து 4 சதவீதத்திற்கு குறைந்துள்ளது. 

ஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து நிறுவன தலைவரான ஜார்ஜ் அலெக்சாண்டர், முத்தூட் தலைமை கிளையின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பணியாளர்களின் போராட்டத்தில் எந்தவித நியாயமும் இல்லை. மற்ற கம்பெனிகளை காட்டிலும் முத்தூட் பின்கார்ப் கிளைகளில் ஊதியமும், போனஸும் அதிகளவில் அளிக்கப்படுகின்றன.

ஊழியர்களின் போராட்டத்தினால் பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் வெகுவாக குறைந்துள்ளன. அப்படியே சென்றால் கேரளாவில் முடங்கி உள்ள 300 கிளைகளையும் மூடுவதை தவிர்த்து வேறு வழியில்லை" என்று கூறினார். இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.