உன் தங்கச்சியை தட்டி தூக்குறேன்டா! டிக் டாக்கில் சவால் விடுத்த மச்சினன் தலையை துண்டாக எடுத்த மாப்பிள்ளை! நெல்லை பயங்கரம்!

நெல்லையில் காதல் திருமணம் செய்த இளைஞர் தன் மனைவியின் வீட்டாருக்கு டிக் டாக் மூலம் சவால் விடுத்ததால் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


நெல்லை மாவட்டம் மருகால்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் . இவரது மகன் பெயர் நம்பிராஜ். இவர்கள் வாழும் அதே பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். தங்கபாண்டியனின் மகள் பெயர் வான்மதி.

நம்பிராஜ் மற்றும் வான்மதி ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஒரே சாதியினராக இருந்தாலும் இவர்களது காதலை வான்மதியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகையால் நம்பிராஜ் வான்மதியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து வான்மதியின் பெற்றோர் நம்பிராஜ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.

அவர்கள் கோபத்துடன் இருப்பதை நம்பிராஜ் அவரது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டு டிக் டாக் மூலம் வான்மதியின் குடும்பத்தினருக்கு சவால் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வான்மதியின் குடும்பத்தினர் நம்பிராஜை கொலை செய்யத் துணிந்து உள்ளனர்.

இதனையடுத்து நம்பிராஜை மதுகுடிக்க அவரது நண்பர்கள் அழைத்து சென்றுள்ளனர் . அந்த இடத்தில் அவரை கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக வான்மதியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரித்தபோது தங்களது மகளை வீட்டுக்கு தெரியாமல் கூட்டி சென்று திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தியதால் ஆத்திரத்தில் இம்மாதிரியான செயல் செய்ததாக அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.