மாப்பிள்ளையின் உறுப்பு பெரிதாக இருந்ததை முன்கூட்டியே பார்த்துவிட்ட மணப்பெண், அதையே காரணமாக வைத்து திருமணத்தை நிறுத்திவிட்டார்.
மாப்பிள்ளைக்கு அது ரொம்ப பெருசா இருக்கு..! முன்கூட்டியே கண்டுபிடித்து திருமணத்திற்கு நோ சொன்ன மணப்பெண்! அதிர்ந்த உறவுகள்!
பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ரமேஷ் என்பவரும் அமெரிக்காவில் பணிபுரியும் ராஷ்மி என்பவரும் இணையதளம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். பின்னர் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் நிச்சதார்த்தம் நடந்து தற்போது ஜனவரி மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது .
திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இதுவரையில் நான்கு லட்ச ரூபாய் வரை ரமேஷ் குடும்பத்தினர் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ராஷ்மி அமெரிக்கா செல்வதாக கூறியுள்ளார் . இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் குடும்பத்தினர் திருமணம் நடக்க உள்ள நிலையில் அமெரிக்கா செல்லக்கூடாது என கூறியுள்ளனர். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை எனவே நிறுத்தி விடுங்கள் எனக் கூறினார் ராஷ்மி.
இதனால் உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குக் காரணம் என்னவென கேட்க, மாப்பிள்ளைக்கு மூக்கு பெரிதாக இருக்கிறது அதனால் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என கூறியுள்ளார். இதையடுத்து மணமகன், அதைப் பற்றி கவலைப்படாதே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கின் தோற்றத்தை மாற்றிக் கொள்கிறேன் என ராஷ்மியை சமாதானம் செய்தார்.
ஆனால் அதை ராஷ்மி ஏற்றுக்கொள்ளவில்லை. மூக்கு மட்டும் அல்ல மொத்தத்தில் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் , திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய ராஷ்மீ மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஷ்மீ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.