நடுவானில் அறுந்த ராட்சத ராட்டினம்! அலறிய பொதுமக்கள்! வீடியோவில் சிக்கிய மோசமான விபத்து!

கேளிக்கை பூங்காவில் ராட்சத ராட்டினமொன்று பாதியில் அருந்து விழுந்த சம்பவமானது குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத். இங்கு இந்திய அளவில் புகழ்பெற்ற கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு ராட்சத ராட்டினம் என்று உபயோகிக்கப்படுகிறது.  எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் ஒரு பகுதியானது அதன் மையப்பகுதியில் பலமாக இடித்துள்ளது. இணைப்பு துண்டித்துபோய் ராட்டினம் அறுந்து விழுந்து உள்ளது.

விபத்து ஏற்பட்ட போது ராட்டினத்தில் 31 பேர் பயணித்தனர். 29 பேரை அகமதாபாத் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 27 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து குறித்து அகமதாபாத் ஊராட்சி தலைவரான விஜய் நெஹ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், "இந்த கோர விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். ராட்சச ராட்டினத்தில் இயக்குவதற்கு கேளிக்கை பூங்கா நிர்வாகத்தினர் உரிய உரிமைகளை பெற்றார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. மேலும் காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர் ஆகியோர் சம்பவ இடத்தில் விபத்திற்கான காரணங்களை ஆராய விரைந்துள்ளனர். குஜராத் அரசானது இதுபோன்ற விபத்து இனி ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ளும் என்று உறுதியளிக்கிறேன்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.