சென்னையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்! அருகே சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கண்ணீர் வரவழைக்கும் நிகழ்வு!

ராட்சத திமிங்கலம் கடலில் அடிப்பட்டு உடல் சிதைந்து கரை ஒதுங்கிய சம்பவமானது சென்னை கடற்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை எண்ணூர் கடற்கரையில் நேற்று இராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. திமிங்கலமானது கப்பலில் அடிப்பட்டு உடல் சிதைந்து கிடந்ததால் மீனவர்கள் அதனை மீட்டெடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.

கிரேன் உதவியுடன் மீட்டெடுக்க முயற்சித்தபோது திமிங்கலத்தின் உடல் மேலும் சிதைவடைய தொடங்கியது. இதனால் மீனவர்களால் எவ்வளவு முயன்று பார்த்தும் திமிங்கலத்தை இழுக்க முடியவில்லை.

உடனடியாக மீனவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கடலிலிருந்த திமிங்கலத்தின் உடலில் கயிற்றை கட்டி ஜேசிபி எந்திரத்தின் மூலம் வெளியே எடுத்தனர்.

கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் திமிங்கலத்தை புதைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன.