கள்ளக்காதலன் கூட என்னடி பண்ற? பெரியம்மா மகளுக்கு சித்தி மகனால் ஏற்பட்ட விபரீதம்! தஞ்சை பயங்கரம்!

தஞ்சாவூரில் சொந்த மகள்கள் கண் முன்னே கடன் பிரச்சினை காரணமாக தாய் மற்றும் ஆண் நண்பரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வனிதா. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

வனிதாவின் கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார் . ஆகையால் ஆண் நண்பர் கனகராஜ் என்பவர் உடன் இணைந்து ஒரே வீட்டில் வனிதா தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வனிதா குடும்ப செலவுக்காக பிரகாஷ் என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார். கடனாக பெற்ற பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாயை பிரகாஷ் இடம் திருப்பி செலுத்தி விட்டார்.

வெறும் ரூ.50,000 ரூபாய் பாக்கி ஆக இருந்த பட்சத்தில் வனிதாவால் அதனை திருப்பித் தர இயலவில்லை. ஆகையால் சிறிது கால அவகாசம் வேண்டுமென்று பிரகாஷிடம் கேட்டிருக்கிறார்.

கடனை திருப்பி தராமல் நீண்ட காலமாக காலம் தாழ்த்தி வந்ததால் வனிதா மீது பிரகாஷ் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடனைத் திருப்பித் தருமாறு அவ்வபோது வனிதாவிடம் சண்டையிட்டு வந்துள்ளார் பிரகாஷ்.

இந்நிலையில் இன்று காலை பிரகாஷ் மற்றும் அவரது காதலி மகேஸ்வரி, கூட்டாளி சூர்யா ஆகியோர் இணைந்து குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் வனிதாவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். 

வனிதா மற்றும் அவரது ஆண் நண்பர் கனகராஜ் மற்றும் இரு மகள்கள் ஆகியோர் வீட்டில் இருந்த நிலையில் பிரகாஷும் கூட்டாளிகளும் இணைந்து பணத்தை திருப்பி தருமாறு வனிதாவுடன் சண்டையிட்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது அந்நிலையை பிரகாஷ் மற்றும் அவரது கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பயன்படுத்தி வனிதா மற்றும் அவர்தான் நண்பரான கனகராஜ் சரமாரியாக இரு மகள்கள் கண்முன்னே வெட்டி சாய்த்தனர்.

இந்த சம்பவத்தில் வனிதா மட்டும் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் வனிதாவின் இரண்டு பெண் குழந்தைகள் கண் முன்னே அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் வீட்டிலிருந்து அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து போலீசார் வனிதா மற்றும் கனகராஜ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பிரகாஷ் சூர்யா மற்றும் மகேஸ்வரி ஆகியோரை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.