பிரபல இசை அமைப்பாளரின் தங்கையை முதல் படத்திலேயே வளைத்துப் போட்ட தனுஷ்! பரபரக்கும் கோடம்பாக்கம்!

ஜி.வி.பிரகாஷின் தங்கைக்கு 2 படத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ள செய்தியானது கோலிவுட்டில் வைரலாகி வருகிறது.


கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி. பிரகாஷ் தற்போது படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் 12-க்கும் மேலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய தங்கையான பவானிஸ்ரீக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இவர் கே.பே.ரனசிங்கம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை விருமாண்டி என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். படம் வெளிவருவதற்கு முன்பே அவருக்கு மேலும் 2 படங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் இயக்குநரான செல்வராஜ் தனுஷை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். மேலும் "சூரரைப்போற்று" படத்திற்கு பிறகு சுதா கொங்கராவுடைய அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியானது கோலிவுட்டில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.