21 வயது இளம் பெண் போலீஸ்..! 2 மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சி! அதிர வைக்கும் காரணம்!

ஊர்க்காவல் படைப்பெண் காவல்துறை மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவமானது தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் கோரிக்குளம் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு வண்டிக்கார தெரு என்ற இடத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் நிரோஷா. நிரோஷாவின் வயது 21. இவர் ஊர்க்காவல் படையில் பெண் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இதனிடையே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஆட்டோ ராஜேந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஷங்கரிடம் 3.30 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். ஆனால் அவருக்கு போலி விசாவை தயாரித்து சிங்கப்பூர் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். விமான நிலையத்திலேயே போலி விசா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஷங்கரும் திருப்பி அனுப்பப்பட்டார்.

பின்னர் சங்கர் ராஜேந்திரனிடம் பணத்தை திருப்பித்தருமாறு முறையிட்டுள்ளார். ஆனால் ராஜேந்திரன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சம்பவம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதியன்று சங்கர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

ஆனால் இதுவரை அவருடைய புகாருக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிரோஷா தன்னுடைய தந்தை மற்றும் 2 மகன்களுடன் தஞ்சை நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென்று யாரும் எதிர்பாராத வேளையில் தன் தந்தை மீதும், 2 மகன்கள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார். மேலும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

தக்க சமயத்தில் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறுதல் கூறினர். இந்த சம்பவமானது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.